​​ விவாகரத்து செய்யும் தனது முடிவைக் குடும்பத்தினர் ஆதரிக்கும் வரை வீடுதிரும்புவதில்லை என தேஜ்பிரதாப் அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவாகரத்து செய்யும் தனது முடிவைக் குடும்பத்தினர் ஆதரிக்கும் வரை வீடுதிரும்புவதில்லை என தேஜ்பிரதாப் அறிவிப்பு


விவாகரத்து செய்யும் தனது முடிவைக் குடும்பத்தினர் ஆதரிக்கும் வரை வீடுதிரும்புவதில்லை என தேஜ்பிரதாப் அறிவிப்பு

Nov 09, 2018 6:10 PM

அரித்துவாரில் உள்ள லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப், விவாகரத்து செய்யும் தனது முடிவைக் குடும்பத்தினர் ஆதரிக்கும்வரை வீடுதிரும்புவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் திருமணமான ஆறே மாதத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் புத்தகயாவில் விடுதி அறையில் இருந்து வெளியேறிய பின் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

ஆன்மீகத் தலங்களுக்குச் சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரில் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கிருந்து பாட்னாவில் உள்ள தொலைக்காட்சிக்குத் தொலைபேசியில் பேட்டியளித்த அவர், தனது விவாகரத்து முடிவைக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளும் வரை வீடு திரும்பப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.