​​ ஓடும் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்த ரூ. 5.78 கோடியை செலவழித்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓடும் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்த ரூ. 5.78 கோடியை செலவழித்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்

Published : Nov 09, 2018 5:12 PMஓடும் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்த ரூ. 5.78 கோடியை செலவழித்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்

Nov 09, 2018 5:12 PM

ஓடும் ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு  கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள், அந்த பணத்தை ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே செலவு செய்துவிட்டதாக விசாரணையில் கூறியுள்ளனர். 

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில், மேற்கூரையை துளையிட்டு 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் அரங்கேற்றப்பட்ட இந்த கொள்ளை வழக்கில் 2 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு மத்திய பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில், 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணிகர ரயில் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் யார் யார் ?, கொள்ளையடித்த பணத்தை என்ன செய்தார்கள் ? அவற்றை பங்கு பிரித்து சொத்துக்கள் வாங்கியுள்ளார்களா ? கொள்ளை நடந்த 3 மாதங்களிலேயே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலானதால் பணத்தை மறைத்து வைத்திருக்கிறார்களா? என்ற கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கொள்ளையர்கள் பணம் குறித்து தகவல் கூறினால், அதை உடனடியாக பறிமுதல் செய்ய சி.பி.சி.ஐ.டி.யின் தனிப்படை ஒன்று மத்தியப்பிரதேசத்தில் முகாமிட்டு காத்திருக்கிறது.

இந்நிலையில், கொள்ளையடித்த பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே பங்கு பிரித்துக் கொண்டு, செலவழித்து விட்டதாக விசாரணையின்போது கொள்ளையர்கள் வாக்குமூலத்தில் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவற்றை தங்கமாகவோ, வேறு பொருள்களாகவோ மாற்றியிருக்கிறார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொள்ளை போன பணத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட மீட்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திணறி வருகின்றனர்.