​​ சென்னையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரைவயதுக் குழந்தை சிறு காயத்துடன் உயிர்பிழைத்தது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரைவயதுக் குழந்தை சிறு காயத்துடன் உயிர்பிழைத்தது

Published : Nov 09, 2018 4:12 PMசென்னையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரைவயதுக் குழந்தை சிறு காயத்துடன் உயிர்பிழைத்தது

Nov 09, 2018 4:12 PM

சென்னை தியாகராயநகரில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை நல்வாய்ப்பாகச் சிறுகாயத்துடன் உயிர்பிழைத்துள்ளது. சென்னை தியாகராயநகரில் சிற்றம்பலம் அப்பார்ட்மென்ட் என்னும் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் அருண்குமார் என்பவர் குடியிருந்து வருகிறார்.

இவரின் ஒன்றரை வயது மகன் பரத் வீட்டின் பால்கனியில் உள்ள கம்பியின் இடைவெளி வழியாக வெளியேறிக் கீழே விழுந்தான். இதில் இடது கண் புருவம் அருகே காயமடைந்த சிறுவனுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 3தையல் போட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்துள்ளனர். இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தாலும் குழந்தை சிறு காயத்துடன் உயிர் பிழைத்துள்ளது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.