​​ இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற சுயஒழுக்கம், பொறுப்புடன் இருக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற சுயஒழுக்கம், பொறுப்புடன் இருக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்


இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற சுயஒழுக்கம், பொறுப்புடன் இருக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Nov 09, 2018 3:02 PM

இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற சுயஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் இருக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

ஹெல்மெட், சீட் பெல்ட்டை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணிந்து பயணிப்பவர்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்திருந்தாலும் பின்னால் இருப்பவர்கள் அணிவதே கிடையாது என்று தெரிவித்த நீதிபதிகள் சிலர் தலை வியர்ப்பதாகவும், தலைவலி ஏற்படுவதாகவும்  கூறி ஹெல்மெட் அணிவதில்லை என்று கூறினர். காவல்துறை, போக்குவரத்து  காவல்துறை உதவியுடன் துண்டுப்பிரசுரங்கள் மூலம் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு எற்படுத்திவருவதாகவும் ஆனால் பலர் 100 ரூபாய் அபராதத்தை செலுத்திவிட்டு தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் செல்வதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தரவுகளை மதிக்காமல் வெறும் உத்தரவுகளை பிறப்பித்து என்ன பயன் என வேதனை தெரிவித்த நீதிபதிகள் மக்கள் சுயஒழுக்கத்தோடு ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிக்க நினைக்க வேண்டும் என்று கூறினர். முக்கிய சாலைகளில் சி.சி.டி.வி. பொறுத்தப்பட்டுள்ளதா என்றும் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் செல்பவர்கள்  சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படுகிறார்களா? என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

போக்குவரத்து காவல்துறையில் போதுமான காவலர்கள் இருக்கிறார்களா?, எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்றும், தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் தலைக்காயம் மற்றும் முதுகுதண்டுவட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 28-க்கு ஒத்திவைத்தனர்.