​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி திருடனை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் வலைவீச்சு

Published : Nov 09, 2018 2:49 PM

கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி திருடனை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் வலைவீச்சு

Nov 09, 2018 2:49 PM

திண்டுக்கல்லில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி திருடனை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர். நேற்றிரவு நாகல் நகர் மேம்பாலம் அருகே உள்ள மிதிவண்டி உதிரிபாக கடையின் பூட்டை உடைத்த முகமூடி கொள்ளையன், உள்ளே புகுந்து 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடினான்.

இதையடுத்து, அருகிலுள்ள மளிகை கடையின் பூட்டை உடைக்க முயன்ற கொள்ளையன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை லாவகமாக திருப்பினான்.இதற்கிடையே, அவ்வழியாக பொதுமக்கள் வந்ததால் முகமூடி கொள்ளையன் தப்பியோடியுள்ளான். இது தொடர்பான சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.image