​​ அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே சர்கார் விவகாரத்தை அரசு பயன்படுத்துகிறது - டிடிவி தினகரன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே சர்கார் விவகாரத்தை அரசு பயன்படுத்துகிறது - டிடிவி தினகரன்


அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே சர்கார் விவகாரத்தை அரசு பயன்படுத்துகிறது - டிடிவி தினகரன்

Nov 09, 2018 2:44 PM

அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே சர்கார் விவகாரத்தை அரசு பயன்படுத்துகிறது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை இன்று சந்தித்த தினகரன், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, சர்கார் திரைப்படத்தில் இலவச திட்டங்கள் குறித்த நிலைப்பாடு தெளிவாக இல்லை என்றும், திரைப்படத்தில் காட்டுவதாலேயே மக்களின் மனம் மாறப்போவதில்லை என்றும் தினகரன் கூறினார்.