​​ அதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜர்


அதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜர்

Nov 09, 2018 12:52 PM

அதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜராகி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். சிபிஐ-யில் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவுக்கும் இடையே அதிகார மோதல் மூண்டு, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் மீது சிபிஐ லஞ்ச வழக்கு பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, இருவரது அதிகாரங்களும் பறிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றம் சென்றதை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் கண்காணிப்பில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில் நேற்று மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு ஆஜரான அலோக் வர்மா, தன் மீது ராகேஷ் அஸ்தனா கூறிய முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்நிலையில் இன்றும் அவர் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதேபோல ராகேஷ் அஸ்தனாவும் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.