​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்குப் 10 முதல் 50 வயது வரையுள்ள 539பெண்கள் பதிவு

Published : Nov 09, 2018 12:37 PM

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்குப் 10 முதல் 50 வயது வரையுள்ள 539பெண்கள் பதிவு

Nov 09, 2018 12:37 PM

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்குப் பத்து முதல் ஐம்பது வயது வரையுள்ள 539பெண்கள் பதிவுசெய்துள்ளனர். சபரிமலையில் ஒரேநாளில் அதிகம்பேர் கூடி நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கேரளக் காவல்துறை கூட்ட மேலாண்மைக்கான அமைப்பை இணையத்தளத்தில் தொடங்கியுள்ளது.

இதில் பக்தர்கள் தங்கள் பெயர், ஊர், எந்த நாளில் எந்த வழியாகக் கோவிலை அடையத் திட்டம் என்பது பற்றிய விவரங்களைப் பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்துள்ள எண்ணிக்கைக்கேற்பக் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வர்.

இந்த இணையத்தளத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக 3இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 539பேர் பத்து முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்கள் ஆவர்.