​​ உலகக்கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் இன்று தொடக்கம்..! இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகக்கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் இன்று தொடக்கம்..! இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக்கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் இன்று தொடக்கம்..! இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

Nov 09, 2018 8:03 AM

உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தொடர்,  மேற்கு இந்திய தீவுகளில் இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், இந்தியா, மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து ஆகிய 10 அணிகள் களமிறங்குகின்றன.

10 அணிகளும் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. தொடக்க நாளான இன்று, முதல் லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானா தேசிய மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.