​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் பிரச்சனைகளைக் களைய ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட்டுக்கு அறிவுரை

Published : Nov 09, 2018 7:41 AM



போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் பிரச்சனைகளைக் களைய ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட்டுக்கு அறிவுரை

Nov 09, 2018 7:41 AM

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் எனப்படும் உணர்விகள் தொடர்பான பிரச்சனைகளைக் களைந்து கொள்ளுமாறு ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களை விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானம் அண்மையில் விபத்தில் சிக்கி 189 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் இயக்கும் 6 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உணர்விகள் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்து கொள்ளுமாறு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பிரச்சனை சரிசெய்யப்படா விட்டால் தாழ்தல், நிலப்பரப்பில் மோதுதல், விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது