​​ மூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் சிகிச்சைக்கான நிதியுதவி - விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் சிகிச்சைக்கான நிதியுதவி - விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை

Published : Nov 09, 2018 7:41 AMமூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் சிகிச்சைக்கான நிதியுதவி - விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை

Nov 09, 2018 7:41 AM

மூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை, வருகிற 29ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூளை பாதிப்புக்குள்ளான 10 வயது மகனை கருணைக் கொலை செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து தாமாக முன்வந்த அனிருதா மருத்துவ அமைப்பின் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிறுவனின் தந்தை ஆஜராகி, தன் மகனின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையடுத்து, மூளை பாதிப்புக்குள்ளாகி, செயலிழந்த நிலையில் தவிக்கும் குழந்தைகளின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை வரும் 29ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல், மத்திய சுகாதாரத் துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.