​​ தொடர் மழையால் கேரளா - கர்நாடகா இடையே சரக்குப் போக்குவரத்து பாதிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர் மழையால் கேரளா - கர்நாடகா இடையே சரக்குப் போக்குவரத்து பாதிப்பு


தொடர் மழையால் கேரளா - கர்நாடகா இடையே சரக்குப் போக்குவரத்து பாதிப்பு

Nov 09, 2018 7:10 AM

நீலகிரி மாவட்டம் கூடலூரில், தொடர் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், கீழ்நாடு காணி என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு பிளவு ஏற்பட்டது. இதையடுத்து கனரக வாகனங்கள், லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால், கேரளா, கர்நாடகா இடையேயான சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால், சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.