​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிப்பு

Published : Nov 09, 2018 6:14 AM



சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிப்பு

Nov 09, 2018 6:14 AM

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.

விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், அதிமுகவினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் விஜய் பேனர்களை கிழித்து அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் சென்னை வடபழனியில் இருக்கும் வீட்டிற்கு நள்ளிரவில் போலீஸ் சென்றனர். இதையடுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக அவர் வீட்டிற்கு போலீசார் சென்றதாக, சர்கார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ட்விட்டரில் பதிவிடப்பட்டது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன், பாதுகாப்பு பணிக்காகவே, ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் வருகை தந்தார். சிறிது நேரத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனிடையே, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், போலீசார் பலமுறை தனது வீட்டுக் கதவை பலமாக தட்டியதாகவும், ஆனால், தாம் அங்கு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போது போலீசார் யாரும் தமது வீட்டுப் பகுதியில் இல்லை என்றும் ஏ.ஆர்.முருகதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.