​​ வங்கி கடன் ஏய்ப்பாளர்களின் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை ஏலம் விட நடவடிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கி கடன் ஏய்ப்பாளர்களின் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை ஏலம் விட நடவடிக்கை

Published : Nov 09, 2018 6:06 AM

வங்கி கடன் ஏய்ப்பாளர்களின் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை ஏலம் விட நடவடிக்கை

Nov 09, 2018 6:06 AM

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களின் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளையும், நிறுவனப் பங்குகளையும் ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இந்தியா-மொரக்கோ நாடுகளுக்கு இடையே பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்த உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருச்சி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள், தலைமறைவாக இருப்பவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளையும் நிறுவனப் பங்குகளையும் ஏலம் விடுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைக்கவும், மத்திய அமைச்சரவை பல்கலைக்கழக சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ திருவனந்தபுரம், கவுஹாத்தி, மங்களூர் ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் மற்றும் பொதுத்துறை கூட்டாக பராமரிப்பதற்கும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது. டிரெட்ஜிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனத்தில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.