​​ சர்கார் வில்லிக்கு ஜெயலலிதா பெயர் ..! பழ.கருப்பையா சுளீர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்கார் வில்லிக்கு ஜெயலலிதா பெயர் ..! பழ.கருப்பையா சுளீர்

Published : Nov 08, 2018 9:34 PM



சர்கார் வில்லிக்கு ஜெயலலிதா பெயர் ..! பழ.கருப்பையா சுளீர்

Nov 08, 2018 9:34 PM

சர்கார் படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என்பதற்கு பதிலாக ஜெயலலிதா என்றே பெயர் வைத்திருக்காலாம் என்று சர்கார் படத்தில் வில்லனாக நடித்த திமுக பேச்சாளர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் தயாரித்துள்ள சர்கார் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், தற்போதைய திமுக பேச்சாளருமான பழ.கருப்பையா..!

படத்தில் ஒரு விரல் புரட்சியே என்ற பாடலில் அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்று 15 நொடிகளுக்கு ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது. அதில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தலைமையில் இலவச மிக்ஸி ,கிரைண்டர், மின்விசிறி மற்றும் அரசின் வண்ண தொலைக்காட்சிப்பெட்டி போன்றவை தீயில் வீசியெறிந்து எரிக்கப்படும்.

இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கிய அதிமுக சார்பில் கடும் கண்டன குரல்கள் எழுந்ததோடு, திரையரங்குகளில் போராட்டமும் நடத்தப்பட்டது.

அதே நேரத்தில் இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி வழங்கிய திமுகவினரோ எந்த போராட்டமும் நடத்தவில்லை...! இதற்கு காரணம் திமுகவினர் பொறுமைசாலிகள் என்பதால் மவுனமாக இருப்பதாக பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

அதே போல சர்கார் படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என்பதற்கு பதிலாக ஜெயலலிதா என்றே பெயர் வைத்திருக்காலாம் என்றும் அதில் என்ன தவறு இருக்கிறது என்று பழக்கருப்பையா கேள்வி எழுப்பியுள்ளார்

அதே நேரத்தில் 15 வயதில் அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு இந்தியை எதிர்த்து போராடியவன் என தான் பேசிய வசனம் கலைஞரை குறிப்பதாக கருதி சென்சார் பிரிவினர் நீக்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்

அதே போல சர்கார் படத்தில் நடிகர் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்திருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இருவிரல் மோசடி என்று கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் விஜய் வில்லனை மக்கள் பலத்தால் ஊதி தள்ளி விடுவார் என்று காட்டவே புகைப்பிடிக்கும் காட்சி வைக்கப்பட்டுள்ளதாக பழ.கருப்பையா விளக்கம் அளித்தார்

இந்த குழப்பங்களுக்கு இடையில் மிகவும் விவரம் தெரிந்தது போல் படமெடுத்த, சர்கார் படத்தில் இயக்குனர் முருகதாசும், வசன கர்த்தா ஜெயமோகனும், டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிக்கு பொறுப்பு சுகாதாரத்துறை என்பது கூட தெரியாமல் பொதுப்பணித்துறை என்று தவறாக வசனம் எழுதி உள்ளதாகவும், நெட்டிசன்கள் வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.