​​ மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில், தொழிலகம் ஒன்றில், பெரும் தீ விபத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில், தொழிலகம் ஒன்றில், பெரும் தீ விபத்து

Published : Nov 08, 2018 9:27 PM

மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில், தொழிலகம் ஒன்றில், பெரும் தீ விபத்து

Nov 08, 2018 9:27 PM

மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில், தொழிலகம் ஒன்றில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

நிகழ்விடத்திற்கு, 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். புனேவில், பவானி பெத் ((Bhavani Peth)) என்ற இடத்தில், பைபர் தொழிலகம் ஒன்று அமைந்திருக்கிறது. இங்கு, வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ, தொழிலகத்தின் அனைத்து பகுதிகளையும் கபளீகரமாக்கியது.

பெரும் புகையுடன், கொளுந்துவிட்டு எரிந்த தீயை, 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையான போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.