​​ இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே, யு.பி.ஐயால், விசா, மாஸ்டர் கார்டு மார்க்கெட் பங்கு இழந்துள்ளது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே, யு.பி.ஐயால், விசா, மாஸ்டர் கார்டு மார்க்கெட் பங்கு இழந்துள்ளது

Published : Nov 08, 2018 8:29 PM

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே, யு.பி.ஐயால், விசா, மாஸ்டர் கார்டு மார்க்கெட் பங்கு இழந்துள்ளது

Nov 08, 2018 8:29 PM

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே கார்டு, யு.பி.ஐ உள்ளிட்டவற்றால், விசா, மாஸ்டர் கார்டு ஆகிவை மார்க்கெட் பங்குகளை இழந்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே மற்றும் யூ.பி.ஐ. உள்ளிட்டவை வங்கிகளுக்கிடையேயான விரைவான பரிவர்த்தனைகளுக்கு வழி வகுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ரூபே உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் இந்தியாவிலேயே தங்கும் என்றும் அதன் மூலம் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது ரூபே, யூ.பி.ஐ. உள்ளிட்டவை 65 சதவீத மார்க்கெட் பங்குகளை பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.