​​ 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம், பாலப்பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம், பாலப்பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை


10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம், பாலப்பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Nov 08, 2018 8:00 PM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

image

வேதாரண்யம் அருகேயுள்ள கிராமங்களான அவரிக்காட்டையும், வண்டலையும் நல்லாறும், அடப்பாறும் பிரிக்கின்றன. வண்டல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளி செல்லவும், பொதுமக்கள், வேதாரண்யம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லவும் அவரிக்காடு தான் சுலப வழி. சாலை மூலம் அவரிக்காட்டை அடைய வேண்டுமானால் 23 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. முடியாத பட்சத்தில் ஆற்றைக் கடப்பது தான் ஒரே வழி. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில், அவரிக்காடு - வண்டல் இடையே இணைப்புப் பாலம் கட்டும் பணி கடந்த 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆனால் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள மக்கள், பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். ஆற்றைக் கடப்பதற்காக இயக்கப்பட்ட தனியார் பைபர் படகும் கட்டணப் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது மழை பெய்து ஆற்றில் தண்ணீர் செல்லும் சூழலில் அவரிக்காடு செல்வதற்காக பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

image

பொதுமக்களின் நலன் கருதி பாலம் கட்டும் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். வெள்ளிக் கிழமை முதல் அரசு சார்பில் இலவச படகு சேவை தொடங்கப்படும் என்று வட்டாட்சியர் கூறியுள்ள நிலையில், பாலம் கட்டி முடிக்கப்படும் வரை படகு சேவையை தொடர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.