​​ அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குனர் மற்றும் நடிகர், சமூகப் பொறுப்புடன் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும் - ராமதாஸ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குனர் மற்றும் நடிகர், சமூகப் பொறுப்புடன் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும் - ராமதாஸ்

Published : Nov 08, 2018 7:44 PM

அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குனர் மற்றும் நடிகர், சமூகப் பொறுப்புடன் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும் - ராமதாஸ்

Nov 08, 2018 7:44 PM

அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குனர் மற்றும் நடிகருக்கு சமூகப் பொறுப்பு இருந்திருந்தால் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இளையதலைமுறைக்கு நல்வழி காட்ட வேண்டிய  நடிகர் விஜய் சிகரெட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறி தீய வழியை காட்டியிருப்பதாகக் கூறியுள்ள அவர், கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் காட்சி தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் முருகதாசும், நடிகர் விஜய்யும் செய்திருப்பது ஒரு விரல் புரட்சி அல்ல என்றும் இரு விரல் மோசடி என்றும் அவர் கூறியுள்ளார். 10 முதல் 17 வயது வரையிலான காலகட்டத்தில் தான் சிறுவர்கள் புகைக்கக் கற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள அவர், இவ்வயதுப் பிரிவினரில் பெரும்பான்மையானோர் விஜய்யின் ரசிகர்கள் என்ற நிலையில் புகைக்கு எதிரான பரப்புரையைத் தான் அவர் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொறுப்பை உணர்ந்து புகைப்பிடிக்கும் காட்சிகளை படத்தில் இருந்து உடனடியாக நீக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  1. Vimalanaathan G Udayar

    மரம் வெட்டி கட்சி வளர்த்த ராமதாஸ்..காசுக்காக எதையும் செய்யும் வேஷதாரிகளின் பொறுப்பற்ற பிழைப்பை பற்றி பேசும் தகுதி கிடையாது..

    Reply