​​ மனைவியின் தங்கையைக் கடத்திய புகாரில் சஸ்பெண்ட் ஆன உதவி ஆய்வாளர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவியின் தங்கையைக் கடத்திய புகாரில் சஸ்பெண்ட் ஆன உதவி ஆய்வாளர் கைது

Published : Nov 08, 2018 6:58 PM

மனைவியின் தங்கையைக் கடத்திய புகாரில் சஸ்பெண்ட் ஆன உதவி ஆய்வாளர் கைது

Nov 08, 2018 6:58 PM

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட, மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ஆப்பக்கூடல் புளியங்கரட்டூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் கோபி மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது மனைவியின் சித்தப்பா மகளை கடத்திச் சென்ற புகாரில் கடந்த ஜூன் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டதாக முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் வெங்கடாசலம் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணே அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து உதவி ஆய்வாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.