​​ மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமைச்சர் தங்கமணி சந்திப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமைச்சர் தங்கமணி சந்திப்பு

Published : Nov 08, 2018 5:20 PM

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமைச்சர் தங்கமணி சந்திப்பு

Nov 08, 2018 5:20 PM

டெல்லி சென்றுள்ள மின் துறை அமைச்சர் தங்கமணி மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார்.

2020 - 21-ஆம் ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கவுள்ள வடசென்னை அனல் மின் நிலைய திட்டம் 3, உப்பூர், உடன்குடி, எண்ணூர் உள்ளிட்ட அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு குறித்து அமைச்சர் தங்கமணி பேசியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கையிருப்பை 15 நாட்களுக்கு அதிகரிக்கும் வகையில் நாளொன்றுக்கு 7 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்ப கோரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து தமிழ்நாட்டுக்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய 6312 மெகாவாட்டில் தற்போது 3376 மெகாவாட் மின்சாரம் மற்றும் வந்துகொண்டிருப்பதாகவும், முழு அளவு மின்சாரத்தை வழங்க கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைக்கும் மே முதல் செப்டம்பர் மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலைய ஆண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கோரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.