​​ சென்னையில் போலீசாரைத் தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற இருசக்கர வாகன திருடன் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் போலீசாரைத் தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற இருசக்கர வாகன திருடன் கைது

Published : Nov 08, 2018 4:27 PM

சென்னையில் போலீசாரைத் தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற இருசக்கர வாகன திருடன் கைது

Nov 08, 2018 4:27 PM

சென்னையில் போலீசாரைத் தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற இருசக்கர வாகன திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். ராயபுரம் எம்.சி. சாலையில் நேற்றிரவு ரோந்துப்பணியிலிருந்த ராயபுரம் காவல் உதவி ஆய்வாளர் அகஸ்டின் சுந்தராஜ் தலைமையிலான குழுவினர், அவ்வழியே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது, அவன் வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கமாள் தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பதும், இருசக்கர வாகன திருடன் என்பதும் தெரியவந்தது. போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோதே, திடீரென உதவி ஆய்வாளரின் நெற்றியில் தனது தலையால் 3 முறை முட்டி மயக்கமுறச் செய்த கமலக்கண்ணன், அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளான்.

அவனை சக போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். மயக்கமுற்ற உதவி ஆய்வாளர் அகஸ்டின் சுந்தர்ராஜுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.