​​ தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி - செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி - செங்கோட்டையன்

Published : Nov 08, 2018 3:06 PM



தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி - செங்கோட்டையன்

Nov 08, 2018 3:06 PM

தமிழகத்தில் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவளளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த, அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதி தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன், ஸ்மார்ட் வகுப்பறையையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் கூறினார்.