​​ பன்றிக் காய்ச்சல் முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய நோய் - விஜயபாஸ்கர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பன்றிக் காய்ச்சல் முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய நோய் - விஜயபாஸ்கர்

Published : Nov 08, 2018 12:49 PM

பன்றிக் காய்ச்சல் முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய நோய் - விஜயபாஸ்கர்

Nov 08, 2018 12:49 PM

பன்றிக் காய்ச்சலால் மட்டுமே ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவதில்லை என்றும், பன்றிக் காய்ச்சல் முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய நோய் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளும், மருத்துவர்களும் முழுஅர்ப்பணிப்போடு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார்.

காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகுவதும், உரிய நேரத்தில் சிகிச்சையை தொடங்குவதும் மிகமுக்கியமானது என்பதை பொதுமக்கள் உணரவேண்டும் எனவும் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.