​​ தனது அந்தரங்க படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை அக்சரா ஹாசன் புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனது அந்தரங்க படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை அக்சரா ஹாசன் புகார்

Published : Nov 08, 2018 11:48 AM

தனது அந்தரங்க படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை அக்சரா ஹாசன் புகார்

Nov 08, 2018 11:48 AM

தனது அந்தரங்க படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல்துறையில் நடிகை அக்சரா ஹாசன் புகார் அளித்துள்ளார். இந்தியில் ஷமிதாப் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அக்சரா ஹாசன். விவேகம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் நடிகர் கமலின் இளைய மகள் ஆவார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்சரா வீட்டில் தனிமையில் இருக்கும் போது எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியானது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை அக்சரா, தனது அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டவரை கண்டுபிடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதற்காக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அக்சரா தெரிவித்துள்ளார்.