​​ சென்னை ஆயிரம் விளக்கில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் சாலைமறியல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ஆயிரம் விளக்கில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் சாலைமறியல்

Published : Nov 08, 2018 11:32 AM

சென்னை ஆயிரம் விளக்கில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் சாலைமறியல்

Nov 08, 2018 11:32 AM

சென்னை ஆயிரம் விளக்கில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆயிரம் விளக்கு, குலாம் அப்பாஸ் அலி கான், 5வது தெருவில் மெட்ரோ குடிநீரில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் கலந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம்
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கழிவுநீர் கலந்த தண்ணீர் பாட்டில்களை அவர்கள் கையில் ஏந்தி இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.