​​ ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்


ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்

Nov 08, 2018 11:12 AM

ஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருப்பதாக, சர்கார் திரைப்படத்தை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழ்வளர்த்த இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மெரினாவில் வீரமாமுனிவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.

கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்டவர் வீரமாமுனிவர், தமிழகம் வந்த பிறகு, முதலில் தைரியநாதர் எனப் பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் வடமொழிக் கலப்பை நீக்கி வீரமாமுனிவர் என பின்னர் பெயரை மாற்றிக் கொண்டார். தமிழ் வளர்ச்சிக்கு அவர் செய்துள்ள தொண்டுகளால், தமிழ் உள்ளளவும் வீரமாமுனிவர் பெயரும் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் சர்கார் திரைப்படத்தில் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜெயலலிதா இல்லாமல் பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெயக்குமார் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முடிவுசெய்ய வேண்டிய நீதிபதிகள் மக்கள்தான் என்றும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அதற்கான விடை கிடைக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

சர்க்கார் படத்தில் வியாபார நோக்கத்தோடு ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை உடனடியாக நீக்காவிட்டால் உயிரைக் கொடுத்தாவது அதற்கு தீர்வுகாண அ.தி.மு.க.வினர் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சனம் செய்ய பணம், புகழுக்காக நடிப்பவர்களுக்கு அருகதை கிடையாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர், நோயாளிகளுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மக்கள் இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லலாமே தவிர, பணம் புகழுக்காக நடிப்பவர்களுக்கும், அவர்களை இயக்கி பணம் சம்பாதிப்பவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறினார்.