​​ ஒரே மைதானத்தில் 100விக்கெட்டுகள் வீழ்த்திய ரங்கண ஹெராத்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே மைதானத்தில் 100விக்கெட்டுகள் வீழ்த்திய ரங்கண ஹெராத்

Published : Nov 07, 2018 6:14 PMஒரே மைதானத்தில் 100விக்கெட்டுகள் வீழ்த்திய ரங்கண ஹெராத்

Nov 07, 2018 6:14 PM

இலங்கையின் ரங்கண ஹெராத் ஓய்வுபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரே மைதானத்தில் நூறு விக்கெட் எடுத்த சாதனையைப் படைத்துள்ளார்.

இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துடன் இலங்கைப் பந்து வீச்சாளர் ரங்கண ஹெராத் பன்னாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

93ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டை அவர் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். இதன்மூலம் காலே மைதானத்தில் மட்டும் நூறு விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.  இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 431விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

இன்னும் 4விக்கெட்டுகள் எடுத்தால் ஹாட்லீ, ஸ்டூவர்ட் பிராட், கபில்தேவ் ஆகிய மூவரையும் முந்திவிடுவார். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் லார்ட்ஸ் மைதானத்தில் நூறு விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.