​​ கள்ள கதைக் கருவை வைத்து கள்ள ஓட்டுக்கு எதிராக படம் - தமிழிசை சவுந்தரராஜன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ள கதைக் கருவை வைத்து கள்ள ஓட்டுக்கு எதிராக படம் - தமிழிசை சவுந்தரராஜன்

Published : Nov 06, 2018 2:47 PM



கள்ள கதைக் கருவை வைத்து கள்ள ஓட்டுக்கு எதிராக படம் - தமிழிசை சவுந்தரராஜன்

Nov 06, 2018 2:47 PM

கள்ள கதைக் கருவை வைத்து கள்ள ஓட்டுக்கு எதிராக சர்கார் படம் எடுக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் பொதுமக்களுடன் தமிழிசை சவுந்தரராஜன் தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது மியூசிக்கல் சேர், லெமன் அண்ட் த ஸ்பூன் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சர்க்கார் படம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக கூறினார். அரசாங்கத்தை ஏமாற்றி வியாபாரம் செய்துவிட்டு அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்று படம் எடுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.





  1. Vimalanaathan G Udayar

    கள்ள பணம், கருப்பு பணம் சம்பாதிக்க கள்ள கதைதான் சரின்னு நினைக்கிறவங்க நாட்டை ஆள ஆசைப்படுவதும் அதுக்கு தானா..?

    Reply