​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published : Jan 25, 2018 4:57 PM

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Jan 25, 2018 4:57 PM

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பாக் நீரிணையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்க 50 லட்சம் ரூபாய் முதல் 7 கோடியே 24 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நட்பு நாடு என்று கூறி, கும்பிட்டுக் கொண்டே முதுகில் கோடரியைப் பாய்ச்சுவதைப் போல, இலங்கை நாடாளுமன்றத்தில் அநியாயமான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டுச் சீர்குலைக்கும் இந்த சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசும், தனக்கு சம்பந்தம் இல்லாததைப் போல வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து, அழுத்தம் தரவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.