​​ அந்தோணியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு- வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அந்தோணியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு- வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

Published : Jan 25, 2018 4:51 PM

அந்தோணியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு- வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

Jan 25, 2018 4:51 PM

திருச்சி மாவட்டம் தீராம்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளும், 100க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

மணப்பாறையை அடுத்த தீராம்பட்டி புனித அந்தோணியார் கோயில் திருவிழாவையொட்டி, நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றுள்ளன.

காளைகளை அடக்கி வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், கட்டில், பீரோ, சைக்கிள், தங்ககாசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.