​​ தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மராத்தான் ஓட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மராத்தான் ஓட்டம்

Published : Jan 25, 2018 4:46 PM

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மராத்தான் ஓட்டம்

Jan 25, 2018 4:46 PM

திருவண்ணாமலையில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும்வகையில், ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, திருவண்ணாமலையில் மினி மராத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காந்தி சிலை அருகே மராத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் கந்தசாமி, தானும் மாணவர்களுடன் ஓடினார்.

மாட வீதிகளைக் கடந்து வந்த மராத்தான் ஓட்டம் வேலூர் சாலையில் உள்ள அண்ணா நூழைவுவாயில் அருகே நிறைவடைந்தது.