​​ விடுதியில் மாணவி குளித்ததை எட்டிப்பார்த்த கல்லூரி ஊழியர்- நடவடிக்கை எடுக்க கோரி, மாணவ மாணவிகள் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விடுதியில் மாணவி குளித்ததை எட்டிப்பார்த்த கல்லூரி ஊழியர்- நடவடிக்கை எடுக்க கோரி, மாணவ மாணவிகள் போராட்டம்

Published : Jan 25, 2018 4:35 PM

விடுதியில் மாணவி குளித்ததை எட்டிப்பார்த்த கல்லூரி ஊழியர்- நடவடிக்கை எடுக்க கோரி, மாணவ மாணவிகள் போராட்டம்

Jan 25, 2018 4:35 PM

கோவை அருகேயுள்ள பச்சாபாளையம் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் விடுதியில் மாணவி குளித்ததை எட்டிப்பார்த்த கல்லூரி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள மகளிர் விடுதியில் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இன்று அதிகாகாலை விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவி ஒருவர் குளியலறையில், குளித்துக்கொண்டிருந்தார்.

அவர் குளிப்பதை கல்லூரி கேண்டினில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், சுவர் ஏறிக் குதித்து குளியலறை அருகே மறைந்திருந்து பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனை கவனித்து, அதிர்ச்சியடைந்த அம்மாணவி சக மாணவிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாணவிகள் அனைவரும் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்காததுடன், உரிய பதிலும் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த மாணவிகள், கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.