​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

Published : Nov 03, 2018 12:24 PM

தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

Nov 03, 2018 12:24 PM

தமிழகத்தில் இன்று காய்ச்சலுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம்  பள்ளக்காடு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது நான்கு வயது மகனான ஸ்ரீசாந்த், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறை எதிரே உள்ள மஞ்சமுத்து என்பவரது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மாணவனின் உடல்நிலை நேற்றுமாலை மோசமானது.

இதையடுத்து சேலம் அரசு தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் சிறுவன் ஸ்ரீசாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 மாத கர்ப்பிணி பெண் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். காணம்பட்டியை சேர்ந்த ராமாயி என்ற கர்ப்பிணி பெண் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூர் ராசப்பா நகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண், கணபதிபாளையத்தை சேர்ந்த கணேசன் என்ற முதியவரும் உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த அமுதன் என்ற 5 வயது சிறுவன், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நீலகிரி குன்னூரை சேர்ந்த சுனிதா என்ற பெண்ணும் சிகிச்சை பலனில்லாமல் பலியாகினர்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிவகங்கை அரிக்குடியை சேர்ந்த சித்ரா என்ற பெண், விருதுநகர் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி ஆகியோர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.