​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக.வுக்கு திமுக பகையாளிதான் - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Nov 01, 2018 6:33 PM

அதிமுக.வுக்கு திமுக பகையாளிதான் - அமைச்சர் ஜெயக்குமார்

Nov 01, 2018 6:33 PM

அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. பகையாளிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் அசாம் மாநிலத்துக்கான விருந்தினர் மாளிகை மற்றும் பொது நிர்வாகக் கட்டிடத்தை, அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்தார்.

விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தி.மு.க. - பா.ஜ.க. உறவு குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தங்களைப் பொருத்தவரை தி.மு.க. பகையாளிதான் என ஜெயக்குமார் பதிலளித்தார்.