​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குறும்படப் போட்டி நடத்துவதாக கூறி பணம் வசூல் செய்து மோசடி எனப் புகார்

Published : Nov 01, 2018 6:09 PM



குறும்படப் போட்டி நடத்துவதாக கூறி பணம் வசூல் செய்து மோசடி எனப் புகார்

Nov 01, 2018 6:09 PM

குறும்படப் போட்டி நடத்துவதாக கூறி பணம் வசூல் செய்து மோசடி செய்யப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குறும்பட இயக்குனர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஐயப்பன் என்ற குறும்பட இயக்குநர் அளித்துள்ள புகாரில் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை வடபழனியில் அச்சாரம் என்ற பெயரில் குறும்படப் போட்டி நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார். 60க்கும் மேற்பட்ட குறும்பட இயக்குனர்கள் தலா ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்த நிலையில் தனது அம்மு என்ற குறும்படம் தேர்வு செய்யப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் தான் பரிசு தொகை கேட்ட போது போட்டியை நடத்திய சேகர் என்பவர் குறும்படத்தை தனது பெயரில் யூ டியூபில் போட உரிமை கேட்டதாகவும் அதற்கு தான் மறுத்ததால் பரிசுப் பணத்தை தர மறுத்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்