​​ குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம், பொதுமக்கள் அச்சம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம், பொதுமக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம், பொதுமக்கள் அச்சம்

Jan 25, 2018 12:04 PM

தேனி மாவட்டம் போடி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

போடியை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் அதிகாலையில் புகுந்த சிறுத்தை ஒன்று, கருப்பசாமி என்பவரது வீட்டில் இருந்த 5 ஆடுகளைக் கடித்துக் கொன்றது.

காலையில் ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்ட கருப்பசாமி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

சிறுத்தை நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.