​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை

Published : Oct 28, 2018 7:49 AM



திமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை

Oct 28, 2018 7:49 AM

உலகின் மிகப்பெரிய மீன் இனத்தில் ஒன்றான திமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் எனப்படும் தகவல் தொடர்பு குறித்த ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஈக்வடார் நாட்டு எல்லைக்குட்பட்ட கலபாகஸ் தீவுப் பகுதியில் கடலடி ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

image

அப்போது, சுமார் 45 அடி நீளமுள்ள திமிங்கலச் சுறா சென்று கொண்டிருந்தது. அதனைப் பின்தொடர்ந்து சென்ற ஆய்வாளர் ஒருவர் அதன் வயிற்றுப் பகுதியில் சிறப்புக் கருவியைப் பொருத்தி தகவல் தொடர்பு குறித்து அந்தச் சுறா எழுப்பும் அல்ட்ரா சவுண்ட் ஒலியைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த சுறாவினைப் பாதுகாக்கும் பொருட்டு, அதன் உடம்பிலிருந்து ரத்தத்தையும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.