​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம், எடப்பாடியில் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்

Published : Oct 27, 2018 6:54 AM



சேலம், எடப்பாடியில் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்

Oct 27, 2018 6:54 AM

சேலம் மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தகவல் கூறிய ஸ்கேன் மையம் சீல் வைக்கப்பட்டது. எடப்பாடியில் அரவிந்த் என்ற பெயரில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையின் மருத்துவர் கண்ணன், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக சென்னையிலுள்ள ஊரக சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்றிரவு ஸ்கேன் மையத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது கருவிலுள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பாலினம் பற்றி தெரிவித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எடப்பாடி அரவிந்த் மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.