​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி

Published : Oct 27, 2018 5:27 AM

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி

Oct 27, 2018 5:27 AM

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே 3-வது ஒருநாள் போட்டி புனேயில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவு அணி கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறியதால், புவனேஸ்குமார், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். முதல் இரு ஆட்டங்களில் சதம் அடித்த கோலி இதிலும் சதம் அடிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேற்கிந்திய தீவு அணியில் இளம்வீரர் ஹெட்மயர், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளும் வெற்றிபெற கடுமையாகப் போராடும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.