​​ கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றி சீனா பூண்டு விற்பனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றி சீனா பூண்டு விற்பனை

கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றி சீனா பூண்டு விற்பனை

Jan 25, 2018 11:43 AM

கொடைக்கானல் மலை பகுதியில் விளைவிக்கப்படும் மருத்துவ குணம் மிக்க மலை வெள்ளை பூண்டுக்கு பதிலாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாயம் கலந்த பூண்டுவை கொடைக்கானலில் சுற்றுலாபயணிகளிடம் ஏமாற்றி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

வெள்ளை பூண்டு… 40 வகையான மருத்துவ குணம் கொண்டது..!

மனித உடலில் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பின் அளவை குறைப்பதில் வெள்ளை பூண்டின் பணி மகத்தானது. ஜீரணமின்மை, வாயுத்தொல்லை, ஜலதோஷம், காதுவலி, மூலனோய்கள் வரை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க வெள்ளைப்பூண்டின் அருமையை சொல்லிக்கொண்டே போகலாம்..!

அத்தகைய மலை வெள்ளை பூண்டு தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. வெள்ளப்பூண்டை பயிர் செய்து , விளைவித்து அதனை வெளியில் எடுத்த பின்னர் சுமார் 4 மாதம் வரை பதப்படுத்தி அதன் பின்னரே சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களுடன் அங்கு விளையும் மருத்துவ குணம் மிக்க மலை வெள்ளை பூண்டையும் வாங்கிச்செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனை பயன் படுத்தி சிலர் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ குணமில்லா வெள்ளை பூண்டுகளை சாயமிட்டு, புகை போட்டு மலை கிராமங்களில் விளைய கூடிய மலை பூண்டுகள் போல் கொடைக்கானலில் விற்று வருகின்றனர்

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். சைனா முட்டை, சைனா அரிசி வரிசையில் , சைனா பூண்டால் மக்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் முன்பாக உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதாரதுறையினர் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!