​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

Published : Oct 26, 2018 7:18 AM

கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

Oct 26, 2018 7:18 AM

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில் இருந்து கடந்த மாதம் 30ஆம் தேதி வந்த சுற்றுலா பயணிகள், உதகையில் இருந்து கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது, வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனால், கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், மசினகுடி, வாழைத்தோட்டம், சிங்காரா, மாயார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையில் மனு அளித்தனர்.

இதையடுத்து, அவர்களது வாகனம் மட்டும் செல்ல அனுமதியளித்த போலீசார், உள்ளூர் வாகனங்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகித்தனர்.