​​ ஆம் ஆத்மி MLA’க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம், திங்கட்கிழமைக்கு முன் இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம் ஆத்மி MLA’க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம், திங்கட்கிழமைக்கு முன் இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது

ஆம் ஆத்மி MLA’க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம், திங்கட்கிழமைக்கு முன் இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது

Jan 25, 2018 10:50 AM

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், திங்கட்கிழமைக்கு முன் இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதாயம் அளிக்கும் இரட்டைப் பதவிகள் வகித்ததாக எழுந்த புகாரில் 20 எம்.எல்.ஏக்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மறு அறிவிப்பு வரும் வரை 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆயினும் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதத்தை பிப்ரவரி 6ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.