​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்த விவகாரம், திருச்சி விமான நிலைய குடியேற்ற அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

Published : Oct 25, 2018 7:31 PM

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்த விவகாரம், திருச்சி விமான நிலைய குடியேற்ற அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

Oct 25, 2018 7:31 PM

பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த விவகாரத்தில், திருச்சி விமான நிலைய குடியேற்ற அதிகாரி, வருகிற திங்கட்கிழமை ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் நூர் முஹம்மது என்பவர், நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்தார். அதில், தன் மீதான கிரிமினல் வழக்கில், உயர்நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம அனுமதியோடு, உறவினர் திருமணத்திற்கு வெளிநாடு செல்லவதற்காக, திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது, குடியேற்ற அதிகாரி அனுமதி மறுத்ததுடன் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்ததாக கூறியிருக்கிறார்.

உயர்நீதிமன்ற உத்தரவை குடியேற்ற அதிகாரி பின்பற்றாததால், 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருக்கிறார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், திருச்சி விமான நிலைய குடியேற்ற அதிகாரியை வருகிற திங்கட்கிழமை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.