​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சி.பி.ஐ. அதிகாரிகள் மாற்றத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்

Published : Oct 25, 2018 6:54 PM

சி.பி.ஐ. அதிகாரிகள் மாற்றத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்

Oct 25, 2018 6:54 PM

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா மாற்றப்பட்டதில், பிரதமர் விதிகளை மீறி செயல்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவே சிபிஐ இயக்குநர் பதவிக்கு ஒருவரை தேர்வு செய்து நியமிக்க வேண்டுமென்ற விதிமுறையை சுட்டிக் காட்டினார். ஆனால் விதிமுறையை மீறி நள்ளிரவில் அலோக் வர்மா இயக்குநர் பதவில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அவர் புகார் கூறினார். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி விதிகளை மீறி விட்டதாக கூறிய அவர், ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் சிபிஐ நடத்தும் விசாரணையை கண்டு அஞ்சியே அதிகாரிகள் மாற்றப்பட்டனர் என்றார்.