​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை விமான நிலையத்தில்,விமானத்தின் இருக்கைக்கு கீழே கடத்திவரப்பட்ட 1,600 கிராம் தங்கம் பறிமுதல்

Published : Oct 25, 2018 6:43 PM

மதுரை விமான நிலையத்தில்,விமானத்தின் இருக்கைக்கு கீழே கடத்திவரப்பட்ட 1,600 கிராம் தங்கம் பறிமுதல்

Oct 25, 2018 6:43 PM

மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 1,600 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கொழும்புவிலிருந்து மதுரைக்கு இன்று பிற்பகல் வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய சுங்கம் மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் தங்கம் எதுவும் சிக்காத நிலையில், விமானத்தில் சோதனை செய்யப்பட்டது.

அதில் இருக்கை கீழே 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 600 கிராம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்டது யார் விசாரணை செய்து வருகின்றனர்.