​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒய்.எஸ்.ஆர். காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்

Published : Oct 25, 2018 1:52 PM

ஒய்.எஸ்.ஆர். காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்

Oct 25, 2018 1:52 PM

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சேவல் சண்டைக் கத்தியால் தாக்கப்பட்டதை அடுத்து, தாம் நலமுடன் இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் செல்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்தின் காத்திருப்புப் பகுதியில் இருந்தஜெகன் மோகன் ரெட்டியை செல்ஃபி எடுப்பது போல் அங்குள்ள கேன்டீன் பணியாளர் ஸ்ரீநிவாஸ் அணுகினார். எதிர்பாரா நேரத்தில் சேவல் சண்டைக்குப் பயன்படுத்தப்படும் கத்தியைக் கொண்டு ஜெகன் மோகன் ரெட்டியைத் தாக்கினார். இதில் கையில் லேசான காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி, முதலுதவிக்குப் பின் தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

தாக்குதல் நடத்திய சீனிவாசன் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த ஹர்ஸ வர்தனின் உணவகத்தில் பணிபுரிவதால், அதில் அக்கட்சியின் சதி இருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார். கைதான சீனிவாஸ், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வரக்கூடாது என தாம் விரும்பியதாக போலீசில் தெரிவித்துள்ளார்.

கேன்டீன் பணியாளருக்கு, தனி நுழைவு அனுமதி இருப்பதாலும், பாதுகாப்பு எல்லைக்கு உட்படாத பகுதியில் இருப்பதாலும், விமான நிலையத்தில் விதியை மீறி ஆயுதம் வைத்திருந்தும் சிக்கவில்லை எனவிமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.