​​ அனுமதி பெறாமல் விளம்பரப் பலகை வைத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனுமதி பெறாமல் விளம்பரப் பலகை வைத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை

அனுமதி பெறாமல் விளம்பரப் பலகை வைத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை

Jan 25, 2018 10:46 AM

உரிய அனுமதி பெறாமல் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், விளம்பர பலகைகள் வைக்க கட்டட உரிமையாளர்கள் அனுமதியளித்தாலும் உரிமம் பெறாமல் தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

தனியார் நிறுவனங்கள் விளம்பரங்களை வைத்தாலும் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.