​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞன்

Published : Oct 24, 2018 5:55 PM

100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞன்

Oct 24, 2018 5:55 PM

மேற்கு வங்க மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடியா மாவட்டத்துக்குட்பட்டம் கங்காபிரசாத்பூர் என்ற இடத்தில் அர்கா பிஸ்வாஸ் ((Argha Biswas)) என்ற நபர் நேற்று முன் தினம் இரவு 100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அர்கா பிஸ்வாஸை வளைத்துப் பிடித்த மூதாட்டியின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அர்கா பிஸ்வாசை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின் மூதாட்டி வீடு திரும்பினார்.