​​ தனது சுற்றுப்பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார் கமல்ஹாசன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனது சுற்றுப்பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார் கமல்ஹாசன்

Published : Jan 25, 2018 10:44 AM

தனது சுற்றுப்பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார் கமல்ஹாசன்

Jan 25, 2018 10:44 AM

நடிகர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 21ம் தேதி புதிய கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இதற்காக, மாவட்ட வாரியாக நற்பணி மன்றத்தினரை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில், வாரஇதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், தமது சுற்றுப்பயணத்திற்கு நாளை நமதே என்று பெயர் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய பிரதேசமாக, தமிழகத்தை மாற்றிக் காட்டுவதே தமது கனவு என்று கமல் கூறியுள்ளார். நற்பணி மன்றங்கள் மூலம் அங்குமிங்கும் செய்து வந்த பணிகளை, தற்போது மையத்தில் நின்று மேற்கொள்ள இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

முதலில் ஒருகிராமத்தை தேர்வு செய்து, அரசாங்கம் செய்யத் தவறியதை செய்துகாட்டி முன்மாதிரி கிராமமாக மாற்றுவதே தமது திட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.